தேவன் தமது ஜனங்களில்
50-02-27

16 px

1. நான் தேவனிடத்தில் தயவைப் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர் அதை எனக்கு அருளியிருக்கிறார் என்று நான் உணரும் தயவைப் என்னால் பெற்றுக்கொள்ளக் கூடுமானால்... என்னால் உங்களுடைய நம்பிக்கையைக் கண்டு கொள்ளக் கூடுமானால், அப்போது தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளும்படியாக கூட்டத்தின் போது, சம்பவிக்கும் ஏதோவொன்று அங்கேயிருக்கும் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இப்பொழுது, அநேகர் மகத்தான வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கிறீர்கள், உங்களுடைய செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மற்றவைகளும், "தெய்வீக சுகமளிப்பவராகிய சகோதரன் பிரன்ஹாம்" என்று கூறுவதை நீங்கள் காண்கிறீர்கள். நல்லது, அங்கே அதைப் போன்று அப்படிப்பட்ட ஒரு காரியமும் கிடையாது. அங்கே தெய்வீக சுகமளிப்பவராயிருக்கும் எந்த மனிதனும் கிடையாது. ஒரே ஒரு சுகமளிப்பவர் தான் உண்டு, அவர் தான் தேவ குமாரனாகிய கிறிஸ்து. அவர் தான், தேவன் தான் சுகமளிப்பவர். மனிதன் சுகமளித்தலை பிரதிநிதித்துவப்படுத்த மாத்திரமே செய்கிறான். அவர்கள் கிறிஸ்துவை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்; அவர்கள் சுகமளித்தலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒவ்வொரு நபரும் சுகமளித்தலையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், அதற்கு காரணம் நாம் சுகமடைவது அவருக்குள் தான் இருக்கிறது.

2. அதன்பிறகு அவர்களில் அநேகரால் நிச்சயமாகவே ஒரு வரத்தைப் பற்றிய நினைப்பைக் கிரகித்து கொள்ள முடியாது. "அவர் உன்னதத்திற்கு ஏறி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்" என்று வேதாகமம் கூறுகிறது. நாம் செய்கிற எல்லாமே நிச்சயமாக முற்றிலும் வேதவாக்கியத்தின்படி இருந்தாக வேண்டும். அது ஒரு வேதவாக்கிய பின்னணியில் இல்லாவிட்டால், அப்படியானால் அது சரியல்ல. ஆனால் வேதவாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட எதுவும் உங்களால் அதற்கு செவிகொடுக்க முடியும். அது தேவனாக இருந்தால், தேவன் அதைக் குறித்து சாட்சி கொடுப்பார். அது தேவனாக இல்லை என்றால், அப்படியானால் அவர் அதைக் குறித்து சாட்சி கொடுக்க மாட்டார். வெறுமனே மனிதர்கள் சாட்சி கொடுப்பார்கள், தேவனோ அதைக் குறித்து சாட்சி கொடுக்கவே மாட்டார். ஆனால் அது தேவனாக இருக்குமானால், தேவன் தமக்காகத் தானே சாட்சி கொடுப்பார். நமக்கு ஒவ்வொரு பிற்பகல்களிலும் ஆராதனைகள் இருக்கின்றன, இன்றிரவிலும் கூட்டம் கூடுவதற்கு முன்பாக, இங்கே மேடையிலிருந்து வெறுமனே கொஞ்சமானதை உங்களுக்கு கொடுக்கும்படியாக. வழக்கமாக, முதலாவது இரவில் ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியான சில காரியங்களை ஒருவிதத்தில் விவரிப்பது அவசியம் என்று நான் எண்ணினேன், நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் எனக்கு உதவி செய்யும்படி நான் விரும்புகிறேன். இந்தக் கூட்டமானது - நாம் ஒவ்வொருவரும் இந்தக் கூட்டத்திற்காக நியாயத்தீர்ப்பின் நாளில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று உணருகிறேன், ஒவ்வொருவரும். நான் இதற்காக பதில்கூறியாக வேண்டும். நான் என்ன கூறுகிறேனோ அதற்காக நான் பதில் கூறியாக வேண்டும். நான் என்ன சொல்லுகிறேனோ அதற்காக நான் பதிலளித்தே ஆக வேண்டும்.

3. அப்படியானால், நான் கிறிஸ்துவை உங்களிடம் கொண்டு வருகையில், அவர் உங்கள் கரத்தில் இருப்பார். அதைக் குறித்து நீங்கள் என்ன மனப்பான்மையை எடுத்துக்கொண்டீர்கள் என்பதற்காக நீங்கள் பதில்கூறியாக வேண்டியிருக்கும்: நீங்கள் அதைப் புறக்கணித்தீர்களா அல்லது அதை ஏற்றுக்கொண்டீர்களா என்று நீங்கள் பதில்கூற வேண்டியிருக்கும். நீங்கள்... இந்தக் கூட்டத்தைக் குறித்த உங்கள் மனப்பான்மைக்காக தேவன் உங்களைப் பதில்கூறும்படி செய்வார், எனவே இது மிகவும் புனிதமான ஒரு காரியம் என்பதை நீங்கள் நிச்சயமாக உணர்ந்தாக வேண்டும். சகோதரன் லிட்சே அவர்களும் சகோதரன் மூர் அவர்களும்... பிரதிநிதித்துவம் வகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கூட்டத்தின் மேலாளர்களாக இருக்கிறார்கள். ஹோலினஸ் ஜனங்களைக் கொண்ட இரண்டு ஸ்தாபனங்களை அவர்கள் பிரநிதித்துப்படுத்துகிறார்கள். நான், எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல. நான் ஒரு காலத்தில் ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன். அவர்களுடைய விருப்பத்தைக்கொண்டு, நான் இப்பொழுது ஒரு பாப்டிஸ்டு கிடையாது, ஏனென்றால் நான் தெய்வீக சுகமளித்தலையும், சுகமளித்தலின் வரங்களையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் போதிக்கிறேன். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். எனவே அவர்கள் என்னை அங்கிருந்து எடுத்துப்போட்ட போது, ஹோலினஸ் ஜனங்கள் என்னை ஏற்றுக் கொண்டு, அந்த வரமானது தங்கள் சபைக்கு வரும்படியாக, அவர்கள் நாற்பது அல்லது அதற்கும் அதிக வருடங்களாக ஜெபித்து வந்ததாகக் கூறினார்கள், எனவே நான்... நான் எதைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டுமோ அங்கேயே தேவன் என்னை வைத்திருக்கிறார்.

4. எந்த ஸ்தாபனத்திற்கும் விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது, ஏனென்றால் தேவனிடத்தில் முகதாட்சிணியம் எதுவும் கிடையாது என்பதை நான் காண்கிறேன். அவர் மெதோடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், கத்தோலிக்கர்களையும், பெந்தெகோஸ்தே காரர்களையும், மற்றும் எல்லாரையுமே சுகப்படுத்துகிறார். தேவன் உங்கள் சபை சேர்க்கைக்கு மரியாதை கொடுப்பது கிடையாது; அவர் உங்கள் விசுவாசத்தைத் தான் எதிர்பார்க்கிறார், அவரிடத்தில் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் விசுவாசத்திற்குத் தான் மரியாதை கொடுக்கிறார். அவர் ... கூட செய்வதில்லை. மேலும் சுகமளித்தலானது, நீங்கள் சுகமடையும்படியாக, ஒரு கிறிஸ்தவனாகவும் கூட இருக்க வேண்டியதில்லை. ஆனால் (பெற்ற) சுகத்தில் தரித்திருக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தாக வேண்டும். "போ, இனி பாவம் செய்யாதே, அல்லது இதைக் காட்டிலும் மிக மோசமான காரியம் உன்மேல் வரும்." எனவே நீங்கள்... அநேக நேரங்களில் ஜெப வரிசையினூடாக வருகிற கெட்டியான பரிசுத்தவான்களும், தெய்வபக்தியாக ஜீவித்த மனிதர்களும் ஸ்திரீகளும் சுகத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிடுவதையும், தெருவிலுள்ள விபச்சாரிகள் வரிசையினூடாக வரும்போதோ அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வதையும் நான் காண்கிறேன். அது உங்கள் விசுவாசத்தைப் பொறுத்தது. எஜமான் இங்கே இருந்தபோது, அந்நாட்களில், பரிசுத்த மனிதர்களாக இருந்த அந்த ஆசாரியர்கள், அவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பரிசுத்தமாக இல்லாமல் ஒரு ஆசாரியனாக இருக்க முடியாதிருந்தது. அவர்கள் வார்த்தையைக் கற்று அறிவாளிகளாக இருக்க வேண்டியிருந்தது. அவர்களை நோக்கி எந்த மனிதனும் அவமதிப்பாக விரலை நீட்ட முடியாதிருந்தது, ஏனென்றால் அவர்கள் பரிசுத்தமாகவும், நீதியான மனிதர்களாகவும் இருந்தார்கள். சிலநேரங்களில் இயேசுவையும் அவருடைய கிரியைகளையும் கண்ட புறஜாதிகளும் அவிசுவாசிகளும் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றுக்கொள்ளத் தவறினார்கள், ஆசாரியர்களும் மற்றவர்களும் சுகமடைய முடியாதிருந்தபோது, அவர்களோ இயேசு தங்களைச் சுகப்படுத்தினார் என்று விசுவாசித்தார்கள்.

5. அவர்களில் அநேகர் அவரைப் புரிந்துகொண்டார்கள். சாதாரண ஜனங்கள் அவர் கூறுவதை ஆவலுடன் கேட்டார்கள். இன்றும் பெரிய அளவில் அந்த விதமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நான் ஜனங்களைக் கவனித்திருக்கிறேன்; ஏறக்குறையஎல்லா ஸ்தாபனங்களுமே கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். நமக்கு ஆர்த்தோடாக்ஸ், யூதர்கள், கிரேக்கர்கள், கத்தோலிக்கர்கள், மேலும் எல்லா வகையினரும் கூட இருக்கிறார்கள். ஆனால் தேவன் எந்த வித்தியாசமான ஸ்தாபனத்திற்கும் ஒருபோதும் பட்சபாதம் காட்டுவது கிடையாது; தனிப்பட்ட நபரிடமிருக்கும் விசுவாசத்தைத் தான் அவர் கனப்படுத்துகிறார். "நீ விசுவாசித்தால், என்னால் கூடும்" என்று அவர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, "போ, இனி பாவம் செய்யாதே, அல்லது மிகவும் மோசமான ஒரு காரியம் உன்மேல் வரும்" என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆகையால், உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நீ சுகமடைந்த பிறகு, நீ ஒரு கிறிஸ்தவராக ஆக வேண்டியிருக்கும். நான் இதைக் கூறியிருப்பேன் என்று நம்புகிறேன், இரட்டை பரிகாரத்தைக் (dual atonement) குறித்து பேசியிருப்பேன், நீங்கள் சுகமடையும் போது, உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படுகின்றன. அதன்பேரில் மிக அநேக ஆமென்களை நான் கேட்கவில்லை, ஆனால் அது சத்தியமாக இருக்கிறது. "நீங்கள் சுகமடையும்படி, உங்கள் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்."

6. "போ, இனி பாவம் செய்யாதே, அல்லது மிக மோசமான காரியம் உன்மேல் வரும்." இயேசு, "உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்று சொல்லுவதா, அல்லது உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்று சொல்லுவதா, எது எளிது?" என்று கேட்டார். அவை எல்லாமே ஒரே விதமாகவே இருக்கின்றன. எனவே யாக்கோபு 5:14 என்று நம்புகிறேன், அது, "உங்கள் மத்தியில் வியாதியஸ்தர் யாராவது இருந்தால், அவர்கள் சபையின் மூப்பர்களை அழைப்பார்களாக; அவர்கள் அவர்களுக்காக எண்ணெய் பூசி, ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், அவர்கள் ஏதாகிலும் பாவம் செய்திருந்தால், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சுகமடையும்படி, உங்கள் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்" என்று கூறுகிறது. அது ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியக்காரனுடைய கடமையாக இருக்கிறது. சுவிசேஷத்தின் ஒவ்வொரு ஊழியனுக்கும் தன்னுடைய சபையாருக்காக ஜெபிக்கும்படியான உரிமை உண்டு, தேவனை விசுவாசித்து, சுகமடையும்படியான ஒரு உரிமை அவர்களுக்கு உண்டு. தெய்வீக சுகமளித்தலானது ஒரு மனிதனுக்கோ, அல்லது ஒரு குழுவினருக்கோ சொந்தமானது அல்ல. அது எல்லா ஜனங்களுக்கும் சொந்தமானதாக இருக்கிறது. சுகமளித்தலின் வரமானது வெளியே தேசம் முழுவதிலுமுள்ள வித்தியாசமான சுகமளிக்கும் கூட்டங்களைக் (campaigns) கொண்டிருக்கும்படியாக அனுப்ப வேண்டி கொடுக்கப்பட்டதல்ல. அவ்வாறு இருப்பது என்பது அவர்களுக்கு சரிதான், ஆனால் அதற்கான நோக்கம் அதுவல்ல. எல்லா நேரமும், ஒவ்வொரு சபையிலும் சுகமளிக்கும் கூட்டம் இருக்க வேண்டும், அது எல்லாவிடங்களிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

7. அநேக ஜனங்கள் இந்தக் கூட்டங்களைக் குறித்து தவறான அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நினைத்துக் கொள்கிறார்கள், சுவிசேஷகர் அல்லது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிற யாரோ ஒருவர் அங்கேயிருக்கிற காரணத்தினால், அவர் போகும்போது, எல்லா சுகமளிக்கிற வல்லமையும் போய்விட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். தேவன் பூமியை மூடிக் கொண்டிருக்கிறாரே. உங்கள் மேய்ப்பர், இந்த... உங்கள் மேய்ப்பர், ...?... போன்று. "என்னுடைய மேய்ப்பரால் அதைச் செய்ய முடியாமல் இருப்பதற்கு, அவரிடமுள்ள காரியம் என்ன?". நல்லது, நண்பர்களே, அதைக் கொண்டிருப்பது என்பது தவறான அபிப்பிராயமாகும். உங்கள் மேய்ப்பர், அவர் ஒரு தேவபக்தியுள்ள மனிதராக இருப்பாரானால், எந்த சுவிசேஷகருக்கோ, அல்லது எந்த வரமோ, அல்லது வேறு எதையும் உரிமை கோருகிற எவருக்கும் எவ்வாறு பதிலளிக்கப்படுகிறதோ, அதேவிதமாகவே உங்கள் மேய்ப்பருக்கும் - அவருடைய ஜெபங்களுக்கும் பதில் கிடைக்கும். அவர் ஒரு தேவ மனிதராக இருக்கிறார். நீங்கள் அவ்விதமாக அவருக்கு மரியாதை செலுத்தி, அவரிடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவன் உங்களுடைய - அவருடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பார். அவர், "நீங்கள் சுகமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்" என்று அவர் சொல்லியிருக்கிறார். சுகமளிக்கிற வரத்தைக் கொண்டவர்களாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒவ்வொரு நபரும் அல்ல, ஏதோஒரு சிறிதளவானவர்கள் அல்ல. மரத்திலுள்ள ஒவ்வொரு ஆப்பிள் பழமும், அந்த மரத்தில் இனிமேலும் ஒரு சிறு கிளையும் இல்லாமல் போகும் மட்டுமாக அந்த மரத்தில் இருக்கும். நிலத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிளையாக அது இருக்கும் போதே, அந்த மரத்தில் எப்பொழுதாவது இருக்கும் ஒவ்வொரு மலரும் சரியாக அப்பொழுதே அதற்குள் இருக்கின்றன.

8. பூக்கள் வானத்திலிருந்து இறங்கி வருவதில்லை. மலரானது நிலத்தின் வழியாக மேலே வருவதும் கிடையாது. பூவானது ஏற்கனவே அந்த மரத்தில் இருக்கிறது. அந்த ஆப்பிள் பழங்கள் ஏற்கனவே அதற்குள் இருக்கின்றன. அந்த மரமானது நிலத்தில் நடப்பட்டிருக்கிறது, அது செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், குடிப்பது தான். அது குடித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கான பங்கை விட அதிகம் குடிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது அது அகலமாக பரவி, தள்ளிக்கொண்டு வெளியே வருகிறது. அவ்விதமாகத் தான், நாம் வற்றாத ஜீவ நீரூற்றினூடாக, கிறிஸ்து இயேசுவுக்குள் நடப்பட்டு, பருகத் தொடங்குகிறோம்; நாம் அதிகமாகப் பருகி, வெளியே தள்ளிக்கொண்டு வெளிவருகிறோம். அது சரியே. அது இந்த மூலகங்களை (elements) வெளியே கொண்டு வருகிறது. தேவன் உங்களை அதனிடம் அழைத்திருக்கிற அந்த வரமானது, நல்லது, அப்படியே... அதைக் குறித்த தொல்லை என்னவென்றால், நீங்கள் பருகுவதில்லை. அது சரியே. நீங்கள் பருகுவது கிடையாது. அவர்... அவர் வற்றாத ஜீவ நீரூற்றாயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிப்பதில்லையா? "பூமியின் எல்லைகளெல்லாம் உள்ளவர்களே, நீங்கள் என்னிடத்தில் வந்து பருகுங்கள்?" நீங்கள் பருகாதிருக்கும் காலம் வரையில், நீங்கள் எவ்வளவாக வருகிறீர்கள் என்பதைக் குறித்து பிசாசு கவலைப்படுவதில்லை. பாருங்கள்? நீங்கள் வந்து பருகுங்கள். இப்பொழுது அதற்காகத்தான் இந்தக் கூட்டமானது இருக்கிறது, நீங்கள் பருகுவதற்குத் தான் இது இருக்கிறது.

9. அங்கேஒரு நீரூற்று திறக்கப்பட்டு, இலவசமாக எல்லாவிடங்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இனியும் உங்களால் பருக முடியாத அளவுக்கு பருகுங்கள். அந்த மரமானது, அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ, அதையே பருகுமானால், ஏன், அது எப்போதுமே இன்னுமாக தாகத்தோடு (வறட்சியோடு) தான் இருக்கும். கிறிஸ்தவர்களோடுள்ள காரியமும் அதுதான். அவர்கள் போதுமான அளவு பருகுவதில்லை. நீங்கள் அப்படியே பரவச்செய்து, வேறு யாரோ ஒருவர் அதைப் பார்க்கும் வரைக்குமாக நீங்கள் பருக விரும்ப வேண்டும். பாருங்கள்? தள்ளிக் கொண்டு வெளியே வாருங்கள். ஒரு சாட்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதை தேவனிடம் ஒப்புவித்து விடுங்கள். அதை விசுவாசியுங்கள். வெளியே அதன்மேல் வந்துவிடுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தை உரிமை கோருங்கள். அப்படியே அதை தேவனிடத்தில் ஒப்புவித்து விடுங்கள் - அதை அவரிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். அதை விசுவாசியுங்கள். "உன் வழிகளை கர்த்தரிடத்தில் ஒப்புவி." அப்பொழுது நீ என்ன விரும்புகிறாயோ, அதை அவர் நடப்பிக்கப்பண்ணுவார். ஆனால் அது... மட்டுமாக, அதை நீ பிடித்துக்கொண்டிருக்கும் மட்டுமாக, அவரால் அதைச் செய்ய முடியாது. "இப்பொழுது, நான் ஏதாவது வகையில் நலமடைகிறேனா என்று பார்க்கிறேன், இது வேலை செய்கிறதா என்று பார்க்கிறேன்" என்று கூறுகிறீர்கள். அதை அவரிடம் ஒப்படைத்து விட்டு, மற்றவற்றைக் குறித்து மறந்துவிடுங்கள். நீங்கள் காணக்கூடச் செய்யாத காரியங்களைக் குறித்து சாட்சி சொல்லுங்கள். நீங்கள் அதை விசுவாசியுங்கள். அது நீங்கள் எதைக் காண்கிறீர்கள் என்பது அல்ல; அது நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதாக இருக்கிறது. அது நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பது அல்ல. அவர் ஒருபோதும், "நீங்கள் அதை உணர்ந்தீர்களா?" என்று கேட்கவில்லை. அவர், "நீங்கள்அதை விசுவாசித்தீர்களா?" என்று தான் கேட்டார். அவ்வாறு தான் நீங்கள் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்படுகிறீர்கள். அவ்வாறு தான் நீங்கள் விசுவாசத்தின் மூலமாக சுகமடைகிறீர்கள். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், நீங்கள் காணாத, ருசிக்காத, உணராத, முகராத, அல்லது கேட்காதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நீங்கள் வெறுமனே அதை விசுவாசிக்கிறீர்கள். அது அவ்வாறு இருந்த போதிலும், நீங்கள் அதன்பேரில் செயல்படுங்கள். ஆமென்.

10. நான் அதன்பேரில் துவங்குகிறேன், நமக்கு அநேகமாக, ஏதோவொரு இடத்தில் இடைப்பட்ட நடைபாதையில் மேலும் கீழுமாக ஒரு ஜெப வரிசை இருக்கிறது, அவர்களுக்கு அது இல்லையா? ஆனால் அதைத்தான் நாம் கட்டாயமாக இந்தக் கூட்டத்தில் செய்ய வேண்டும். இப்பொழுது, கூட்டம் நடக்கும் விதத்தைக் குறித்துப் (பேசும்போது). கூட்டமானது... நாம் நமது அறிவுக்கு எட்டின வரையில் மிகச் சிறப்பாகவே அதை நடத்துகிறோம். அவர்கள்... நான் என்னுடைய நேரத்தில் அதிக நேரத்தை ஜெபத்தில் தான் கழிக்கிறேன். நான் அவ்வாறு தான் செய்தாக வேண்டும்,. நான் சென்ற முறை இங்கேயிருக்கையில், சட்டப் பேரவை கூடுமிடத்திற்குக் சற்று கீழே,நான் இங்கேயுள்ள பெந்தெகோஸ்தே சபையில் சகோதரன் பிரவுன் அவர்களோடு இங்கே ஆராதனைகளைக் கொண்டிருந்த போது, காலை நேரம் மட்டுமாக, நாங்கள் ஜெபித்தோம். தற்ச்செயலாக, நான் தேசம் முழுவதும் அதைக் குறித்து சாட்சிகூறத்தக்கதான ஏதோவொன்று அங்கேயுள்ள அந்த சபையில், ஒரு இரவில் நடந்தது, அது நான் எப்பொழுதும் கண்டதிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சியாக இருந்தது. நான் அதை பிறகு குறிப்பிடுகிறேன். அநேகமாக அந்த நபர் இங்கே இருப்பார். அது தன்னுடைய முதுகில், கீழே தரையில் இருந்த ஒரு பெண்மணியாக இருந்தது, அது கீழே கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்தது. நான் அந்த இரவை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அந்த ஸ்திரீ இந்தக் கட்டிடத்தில் இருந்தால், நீ உன்னுடைய கரத்தை உயர்த்துவாயா என்று சற்றே வியப்படைகிறேன்? அவள் இங்கு எங்காவது இருக்கிறாளா என்று அப்படியே வியப்படைகிறேன். அவர் கூட்டத்திற்கு வருகிறான் என்று நம்புகிறேன்.

11. நான் இப்பொழுது அவளுடைய கரத்தைக் காணவில்லை. ஆனால் அவள் தன்னுடைய முதுகில் ஊர்ந்து சென்றாள். நான் பைத்தியம் பிடித்தவர்களுக்கான மருத்துவமனையில், வாலிப பெண்கள் ஒரு படுக்கை மலத்தட்டைக் கொண்டு, தங்கள் முகத்தைக் கழுவுவதையும், மற்ற எல்லாவற்றையும் கண்டிருக்கிறேன், ஆனால் அதைப்போன்று மிகவும் பரிதாபகரமான எதையும் நான் - நான் ஒருக்காலும் கண்டதில்லை. மேலும் அந்த நேரம் முதற்கொண்டு, நான் எப்போதுமே நினைத்துப் பார்ப்பதுண்டு... நிச்சயமாக, நான்-நான்... நான் ஊழியம் செய்யத்துவங்கி, ஒருசில மாதங்கள் தான் ஆகிறது. அது முதற்கொண்டு, நான் எப்போதுமே இதை நினைத்துப் பார்ப்பதுண்டு, இங்கேயுள்ள ஜனங்களும், லிட்டில் ராக்கைச் சுற்றிலுமுள்ளவர்களும் அவ்வண்ணமாக இருந்து, நான் மறுபடியுமாக லிட்டில் ராக்கிற்குத் திரும்பி வரும்படிக்கு நான் விரும்பும்படியாக அவர்கள் கூட்டத்தைக் குறித்து நடந்து கொள்கிறார்கள் (responded). இப்பொழுது, அதுமுதற்கொண்டு இந்த வரத்திற்கு மகத்தான காரியங்கள் சம்பவித்து விட்டன. நான் சற்றுநேரத்தில் அதை விவரிக்கிறேன். அது இருந்ததைக் காட்டிலும் பெரியதான விதமாகவே இருந்தது. இப்பொழுது, தேவன் அதைக் குறித்து எல்லாவிடங்களிலும் சாட்சிகொடுத்துக் கொண்டிருக்கிறார்.

12. இப்பொழுது... பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நாம் பிற்பகலில் ஆராதனைக்கு வர வேண்டும். கூடுமான ஒவ்வொரு நபரும் அதைச் செய்ய நான் விரும்புகிறேன், நீங்கள்-நீங்கள் (வர) முடியாதபடி அவ்வண்ணமாக உங்களுக்கு வேலை இல்லை என்றால், நீங்கள் பிற்பகல் நடக்கும் ஆராதனைக்கு வந்து, ஆண்களுக்கான பிற்பகல் ஆராதனையில் கலந்து கொள்ளுங்கள், திரு. லின்ட்சே அவர்களும், மேலாளர்களும்; சுகமளித்தலை எவ்விதம் அணுகுவது என்பதைக் குறித்து அவர்கள் பேசுவார்கள். நீங்கள் அதைச் செய்யும்படியாக,அது உங்களுக்கு நன்றாக இருக்கும், அந்த ஆராதனைக்கு வர ஆயத்தப்படுங்கள். அதன்பிறகு, நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படி நான் விரும்புகிற வேறொரு காரியம் என்னவென்றால், நாம் வழக்கமாகச் செய்கிறபடி, துரிதமான வரிசை என்று நாம் அழைக்கிறதைக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக நமக்கு இருக்கிற அந்தப் பழைய துரித வரிசைகள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? ஓ, என்னே. நான்... இங்கே அதிக தூரத்தில் இருக்கிற ஒரு அந்நியன் அல்ல. இந்நிலையில், சரியாக ஒருபோதுமே வெற்றிகரமாக செய்யப்படாத அந்தத் துரித வரிசையை நாம் வழக்கமாக கொண்டிருப்பது உண்டு. நான்... தேவன் இந்த வரத்தின் மற்ற பாகத்தைக் கூட்டித்தந்த போது, நான் - இனிமேல் துரித வரிசைகளைக் கொண்டிருக்க மாட்டேன் என்பதாக அவருக்கு வாக்குக் கொடுத்தேன். நான் வெறுமனே அந்த வரிசையைக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதையும் கொண்டிருப்பதில்லை, சுகமளித்தலுக்கான உண்மையான ஜெப வரிசை.

13. அநேக நேரங்களில், நாம் ஜனங்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறோம், அது போவதற்கு முன்பாக, நாம் அவ்வாறு செய்வோம், அவர் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறவிதமாக கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாரானால், கூட்டங்களில் ஒன்றிற்காக தேவனால் இரட்சிக்கப்பட்ட உங்களுடைய மேய்ப்பர்கள் எல்லாரையும் ஒன்றாகக் கூடிவரச் செய்ய நான் விரும்புகிறேன், அப்பொழுது உங்கள் மேய்ப்பர் ஒரு தேவ மனுஷன் என்று ஜனங்களாகிய நீங்கள் காண்பீர்கள், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைக்கும்படிக்கு அதே அதிகாரத்தை அவரும் உடையவராயிருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, நாம் செய்ய வேண்டிய விதம் இதோ இருக்கிறது. நாம் வருகிறோம்... என்னுடைய சகோதரனே, மாம்சத்திலுள்ள சகோதரனே, அவர் இப்பொழுது தான் கடற்படையிலிருந்து திரும்பி வந்திருக்கிறார், அவர் இரண்டாம் உலக யுத்தத்தில் நான்கு வருடங்களை செலவழித்தார், அவர் தம்முடைய எஞ்சிய ஜீவ நாட்களில் முற்றிலுமாக முழுமையான ஊனமுற்றவராகத்தான் இருந்தாக வேண்டும் என்று படுக்கையிலேயே இருந்தார், அவர் ஒருக்காலும் நாற்காலியிலிருந்து நகரவும் இல்லை. அவர் அங்கேயே வைக்கப்பட்டிருந்தார், அங்கே நியூயார்க்கிலிருந்து, லாங் தீவு மருத்துவமனையில் ஒன்றிலுள்ள, ஐக்கிய நாட்டு கடற்படையின் மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவர், "உம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது. நீர் அங்கேயே தான் கிடப்பீர். உம்மால் அங்கிருந்து நகர்ந்துபோகவே முடியாது" என்று கூறிவிட்டார்.

14. அவருடைய இருதயத்திலுள்ள மூன்று வால்வுகள் வாத நோய் சார்ந்த காய்ச்சலினால் அடைக்கப்பட்டிருந்தன. அவர் அதிர்ச்சியோடு நிலை குலைந்து போயிருந்தார்: அவர் காசாபிளாங்கா பட்டணத்திற்குப் போனார், வழித்துணைக் காப்புக்காக வந்த மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் சுக்குநூறாக கிழித்தெறியப்பட்டார்கள். அவர் அங்கே தம்முடைய உச்சக்குரலில் கூச்சலிட்டவாறு படுத்திருந்தார், அவரால் கத்திக் கூச்சலிட முடியாதபோது, தாயாருக்காகவும் எனக்காகவும் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் போகும்படியான ஒரு வெளியீட்டாணையில் தாயார் கையொப்பமிட வேண்டியிருந்தது - அவனை வீட்டிற்கு அனுப்பும்படியாக அவர்களைக் கொண்டு வர அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. அவர் வீட்டிற்குப் போகும் சாலையில் மரித்துப் போனால், அவர்கள் தாயார் தான் பொறுப்புள்ளவர்களாய் இருப்பார்கள். அவர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த போது, "நான் காண விரும்புவது எல்லாம் என்னுடைய சகோதரன் எனக்குப் பக்கத்தில் கடந்து போவது தான்" என்றார். இதோ அவர் இருக்கிறார்: பரிபூரண ஆரோக்கியத்தோடு இருக்கிறார். அவர் செய்திருக்க வேண்டும் என்பது போன்று கர்த்தரிடம் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, அவர் ஒரு கழைக்கூத்தாடியாக ஆகி, வெளியே போய் கழைக்கூத்தாடி வித்தை செய்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு கர்த்தரோ அதற்காக அவரோடு இடைபட்டு, அவரைத் திருப்பி அனுப்பினார். எனவே இப்பொழுது அவர் இங்கே ஆராதனைகளில் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

15. நாம் அதைச் செய்ய முயற்சிக்கும் விதம் இதோ இருக்கிறது. நாம் வழக்கமாக, அட்டைகளை ஊழியக்காரர்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறோம், அவர்கள் தங்கள் சபையாருக்கு அவைகளைக் கொடுக்கட்டும். நல்லது... அது ஊழியக்காரர்கள் மத்தியில் வாக்குவாதம் நடக்கக் காரணமாகி விடுகிறது. ஒருவருடைய சபையார்... முதலாவது ஊழியக்காரர் தம்முடைய சபையாரை துவங்கும்படி செய்கிறார், நாம் அங்கே இருக்கையில், அதுவே ஆராதனையை முடித்துவிடுகிறது, ஏனென்றால் நாம் மேடையில் அவர்களை விடுவதற்கு முன்பாகவே, ஒவ்வொரு நபரும் சுகமடைவதில் நிச்சயமுடையவர்களாக இருக்க நாங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறோம். அவர்களுக்கு என்ன தவறு நேர்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அந்த நபர் சுகமடையும் மட்டுமாக, நாங்கள் மேடையிலேயே தரித்திருக்கிறோம். அவர்கள் எவ்வளவு மோசமாக முடமாகிப்போயிருந்தாலும், திருகிப்போன உறுப்புக்களைக் கொண்டிருந்தாலும், செவிடாகவோ, ஊமையாகவோ, குருடாகவோ, அல்லது அவர்கள் என்னவாக இருந்தாலும், அது காரியமில்லை, தேவன் அந்த நபரைச் சுகப்படுத்துவது மட்டுமாக, நாங்கள் சரியாக அங்கேயே தரித்திருக்கிறோம். அப்போதுஅது கிரியை செய்யாததைக் கண்டோம்.

16. எங்களுக்கு துரித வரிசை உண்டாயிருந்தது. அவர்கள்... அது அங்கே சரியாக இருக்கவில்லை. நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே இதுவே மிகச்சிறந்ததாக இருப்பதாகக் காணப்படுகிறது, ஏனென்றால் இது பரிசுத்த ஆவியினாலே எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் சபையாரிடம் போய்; நான் என்னுடைய சகோதரனை அனுப்புகிறேன், அவன் ஒவ்வொரு நாளும் ஐம்பது ஜெப அட்டைகளை வைத்திருந்து, அந்த ஜெப அட்டைகளை விநியோகிக்கிறான். அதன்பிறகு அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது, நீங்கள் எனக்கு எண் ஒன்றையோ, எண் இரண்டையோ, எண் மூன்றையோ, கொடுப்பீர்களானால், அது எப்பொழுதாவது எண் 15 அல்லது 20ஐ கடந்து சென்றுவிடக் கூடுமானால், நல்லது, அவர்கள் அதற்கு மேல் அந்த ஜெப அட்டைகளை விரும்பவில்லை. அவர்கள் அந்த ஜெப அட்டைகளுக்காக ஒன்று திரண்டு வந்து கூடி விடுகிறார்கள், ஏறக்குறைய அவனிடம் கட்டுப்படுத்த முடியாதபடி அடம்பிடிக்கிறவர்களாய் நடந்து கொள்கிறார்கள், அவர்களுக்கு அந்த ஜெப அட்டை கிடைக்கவில்லை என்றால், குறிப்பாக அநேக, அநேக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிற பெரிய கூட்டங்களில், அவர்களுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை என்றால்.

17. எனவே பிறகு, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி, அதை இந்தவிதமாகச் செய்யும்படி என்னை வைத்தார். நாங்கள் ஐம்பது ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம், எங்கே ஜெப வரிசை ஆரம்பிக்கும் என்று யாருக்குமே தெரியாது. நான் உள்ளே வந்து, ஏதோவொரு சிறு பிள்ளையைக் கொண்டிருக்கிறேன், அல்லது ஒரு வரிசையில் அநேகரை எண்ணுகிறேன், அல்லது அதைப்போன்ற ஏதோவொன்றைச் செய்து, அதை அநேக எண்ணிக்கையாகப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட எண்ணில் தொடங்குகிறேன். அவருக்குத் தெரியாது; எனக்கும் தெரியாது; யாருக்குமே தெரியாது. அது... அது உள்ளூர் ஜனங்களா என்றும் தெரியாது. வழக்கமாக, நாங்கள் உள்ளூர் ஜனங்களுக்குக் கொடுக்கிறோம். ஏன், அப்போது தூரத்திலிருந்து வருகிற ஜனங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டுவதில்லை. ஒருக்கால் அவர்கள் கூட்டத்திற்கு வருவதற்காக, தங்கள் பசுவையோ, அல்லது - அல்லது தகர அடைப்புகளில் பாதுகாக்கப்பட்ட தங்களுடைய பொருட்களை விற்றிருக்கலாம். அப்பொழுது அது எந்த நன்மையையும் செய்யாது, வெறுமனே உள்ளூர் ஜனங்கள் தான். எனவே நாம் அதை எல்லாருக்கும் நியாயமானதாகச் செய்கிறோம். வெறுமனே அட்டைகளைக் கொடுக்கிறோம், அவைகள் எப்பொழுதாவது யாருக்குக் கிடைக்கிறதோ, அதெல்லாம் சரியாகவே இருக்கிறது.

18. ஒரு மனிதருக்கு எண் ஒன்று கிடைத்து, அவர் வரிசையில் முதலாவது வருவார் என்று நினைக்கலாம்; அதுவோ நாற்பதில் துவங்கலாம். நாம் மேடைக்கு வரும் மட்டுமாக நமக்கு அது தெரியாது, தேவனே அதை முடிவு செய்யட்டும். அதன்பிறகு நாம் அங்கிருந்து அநேகரை தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம், அழைக்க வேண்டுமென்று ஆண்டவர் நியமித்திருக்கிறவர்கள், அந்த இரவுக்காக வரிசைக்குள் வருகிறார்கள். அடுத்த இரவில், அடுத்த சாயங்காலத்தில், அவர்கள் இன்னும் அதிக அட்டைகளைக் கொடுக்கிறார்கள். அவ்வாறு, அந்தவிதமாகச் செய்து, பிறகு நாம் அதை சரிசமமாக வைத்துக் கொள்கிறோம், எல்லாருமே உள்ளே வருகிறார்கள். அவர்கள், "நல்லது, இந்த நபர் உள்ளே வருகிறார், அவர்களுக்கு இன்றைக்கு ஒரு ஜெப அட்டை கிடைக்காவிட்டால், அவர்கள் நாளைய தினம் மரிக்கப் போகிறார்கள்" என்று கூறலாம். நல்லது, அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. அப்படியே கர்த்தர் எங்கே அழைத்தாலும். மேலும் இப்பொழுது, புதிய காரியமானது இந்த வரத்தோடு சேர்க்கப்பட்டது முதற்கொண்டு, அது கூட்டத்தினரிடம் வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசி, எல்லாவிடங்களிலும் ஜனங்களை அழைக்கிறது.

19. இப்பொழுது, நான் இங்கே வேதவாக்கியத்தின் ஒரு மூல வாக்கியத்தை (text) வாசிக்க விரும்புகிறேன். எனவே உங்கள் ஜெப அட்டையை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் இப்பொழுது ஒவ்வொரு பிற்பகலிலும் வரலாம். ஜெபத்தோடு இருங்கள். இப்பொழுது இந்தக் கூட்டத்தைக் குறித்து எத்தனை பேர் ஜெபிப்பீர்கள்? உங்கள் கரங்களைப் பார்ப்போம். இப்பொழுது, நண்பர்களே, இது உங்கள் கூட்டமாக இருக்கிறது, நம்மால் கூடுமான வரையில் உங்கள் எல்லாருக்கும் உதவி செய்ய முயற்சிக்கவே நாங்கள் இங்கேயிருக்கிறோம். மேலும் இந்த அபிஷேகத்தை நான் உணருகிறேன், அதனோடு எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அது அதுவாகவே வருகிறது. அது வராமல் இருக்குமானால், நான் மேடையை விட்டு நடந்து சென்று விடுவேன். நான் இங்கே தரித்திருக்கவே மாட்டேன், ஏனென்றால் நான் கொடுக்கிற வாக்குமூலங்களும் உரிமை கோரிக்கைகளும், அதை நடப்பிக்கும்படியாக அங்கே ஒரு இயற்கைக்கு மேற்பட்ட ஜீவன் இருக்க வேண்டியிருக்கிறது. மனிதனால் அதைச் செய்ய முடியாது. மற்ற கூட்டத்தில் இருந்த, உங்களில் அநேகர், நான் இங்கே இருந்தபோது, ஜனங்களுடைய கரத்தைப் பிடிப்பதன் மூலமாக, நான் வியாதிகளை அறிந்துகொண்டேன். எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? நான் அவ்விதம் உத்தமமாயிருந்தால், அது வந்து சம்பவிக்கும் என்று என்னைச் சந்தித்த தூதனானவர் என்னிடம் கூறினார் என்று நான் சொன்னது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, அவர் மோசேக்கு கொடுத்தது போன்று, வேறொரு அடையாளத்தை எனக்குக் கொடுப்பார் என்றும், அது ஜனங்களுடைய இருதயங்களின் இரகசியங்களை சொல்லும் என்பதை ஜனங்களுக்கு நிரூபிக்கும்படியான உண்மையான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறினாரே.

20. அது வந்து சம்பவிக்கும் என்று நான் கூட்டத்தில் சொன்னது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? பாருங்கள்?. அது சரியே. நல்லது இப்பொழுது, அது வந்து சம்பவித்தும் விட்டது. அது சம்பவித்தது முதற்கொண்டு இது ஏறக்குறைய ஐந்தாவது கூட்டமாக இருக்கிறது. அது திடீரென்று வந்து விட்டது. மேலும் அதன்பிறகு, அது வெளிப்பட்டுக் கொண்டிருந்த மூன்றாவது கூட்டத்தில், மேடைக்கு வருவதை ஆயிரக்கணக்கானோர் மூலமாக காணப்பட்ட மகத்தான தேவனுடைய தூதனானவர். அவர் அன்றொரு இரவில் அவருடைய பக்கத்தில் நிற்கவும், என்னோடு கூட எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படத்தைக் கொண்டிருக்கவும் என்னை அனுமதித்தார். எப்பொழுதாவது அவ்விதமாக ஏதாகிலும் சம்பவிப்பது என்பது மனித வரலாறு எல்லாவற்றிலும் இதுவே முதல் தடவையாகும். அவர் அதைச் செய்தார் என்பதை அறிந்துகொள்ளும்படிக்கு நான் இன்றிரவு மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நான் அவருக்காக வேலை செய்யப் போகிறேன், நான் இங்கேயிருக்கையில், நான் அவரைச் சேவிக்கவும், அவருடைய ஜனங்களுக்கு ஊழியம் செய்யவும் என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்யப் போகிறேன். இப்பொழுது, நான் வேதவாக்கியங்களை வாசிப்பதற்கு முன்பாக, உங்களுடைய மனப்பான்மையானது... மற்றவர்களுக்குக் கூறும்படி நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள். இன்றிரவுக்குப் பிறகு நான் பேச மாட்டேன், ஆனால் இந்த வரத்தைக் குறித்த உங்கள் மனப்பான்மையானது உங்களுடைய சுகமளித்தலைத் தீர்மானிக்கும்.

21. இப்பொழுது, தேவன் ஜனங்களாகிய நம்மோடு கூட இருக்கிறார் என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை நிரூபிக்கும்படியாக அவருடைய புகைப்படம் இங்கே இருக்கிறது. எத்தனை பேர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்? இது இன்றிரவில் காண்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். நீங்கள் அதில் ஒன்றைக் கொண்டிருக்கலாம். அவைகள் இங்கேயிருக்கின்றன என்று நினைக்கிறேன். இப்பொழுது, அது... அவர்கள், "தேவன் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாது" என்று கூறுவது வழக்கம். அவ்வாறு கூறின பழங்கால சந்தேகப்பேர்வழி (நாஸ்திகன்) இப்பொழுது இனியும் அதைக் கொண்டு தப்பிக்க முடியாது, ஏனென்றால் அங்கே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் இருக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்த இயற்கைக்கு மேற்பட்ட ஜீவனானது தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது: அவருடைய ஆவி. மேலும் இப்பொழுது, இவைகள்... ஏன் அந்தக் காரியங்கள் சொல்லப்பட்டன என்று யாராவது வியப்படைவார்களானால், இயேசு கிறிஸ்துவின் ஆவியானது நம் மத்தியில் இருக்கிறது. அது சரியே. அவர் நாத்தான்வேலிடம் கூறினார், பிலிப்பு நாத்தான்வேலை ஜெப வரிசைக்கு அழைத்து வந்தபோது, "நீ கபடற்ற இஸ்ரவேலன்" என்று அவர் கூறினார் என்பதை நினைவுகூருங்கள். அவன், "ரபி, என்னை உமக்கு எப்போது தெரியும்?" என்று கேட்டான். அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்பே, நீ மரத்தின் கீழ் இருக்கும் போதே" என்றார். அவன், "ஓ நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் இராஜா" என்றார். அவர் அவனுடைய இருதயத்தின் இரகசியத்தை அவனிடம் கூறினார். அது சரிதானா? சமாரியாவில் கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ, அந்த சமாரிய ஸ்திரீ, அவர் அவளிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர், "போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா" என்றார். அதற்கு அவள், "எனக்குப் புருஷன் கிடையாது" என்றாள். அவர், "நீ அவ்வாறு கூறுகிறாய், நல்லது, உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். இப்பொழுது உனக்கு இருக்கிறவனும் உன் புருஷன் அல்ல" என்றார். அவள், "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள்.

22. துரிதமாக சீஷர்கள் வந்தார்கள், அவள் பட்டணத்திற்குள் போய், "நான் எப்பொழுதாவது செய்த காரியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் கூறின ஒரு மனுஷனை வந்து பாருங்கள். இவர் கிறிஸ்து அல்லவா?" என்று கூறிக் கொண்டிருந்தாள். இப்பொழுது, நான் ஜான் டில்லிங்கர் என்றோ, அல்லது ஜான் டில்லிங்கரின் ஆவி என்மேல் இருக்கிறது என்றோ நான் உங்களிடம் கூறினால், நான் துப்பாக்கிகளை வைத்திருந்து, ஜான் டில்லிங்கரைப் போன்று நடந்து கொள்வேன் என்று தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நான் ஒரு ஓவியன் என்றும், ஒரு மகத்தான ஓவியனின் ஆவி என்மேல் இருக்கிறது என்றும் நான் உங்களிடம் கூறினால், ஒரு ஓவியன் வரைகிற படங்களை நான் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அது சரிதானா? நான் ஒரு கைதேர்ந்த இயந்திர வல்லுநராக இருந்து, இயந்திர வல்லுநரின் ஆவி என்மேல் இருக்கிறது என்று நான் உங்களிடம் கூறினால், உங்களுடைய காரில் என்ன தவறு இருக்கிறது என்று நான் அறிந்து கொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நான் தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறேன் என்றும், இயேசு கிறிஸ்துவின் ஆவி என்மேல் இருக்கிறது என்றும் நான் உங்களிடம் கூறினால், அவர் எதைச் செய்தாரோ, அதைச் செய்யும்படியாகவும், அவர் நடந்து கொண்டது போன்றே நானும் நடந்து கொள்வேன் என்றுதான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அது மனிதரின் மூலமாக அவருடைய ஆவியானவர் கிரியை செய்வதாக இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு சமயம் அவருடைய ஆவி ஒரு வெண்கல சர்ப்பத்தின் மேல் கிரியை செய்தது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பெதஸ்தா குளத்தில், தண்ணீர் எதிர்பாராமல் திடீரென்று கலங்கினது, கலக்கப்பட்ட தண்ணீரில், அப்பொழுது விசுவாசத்தோடே எப்பொழுதாகிலும் யார் உள்ளே இறங்குகிறார்களோ, அவர்கள் தங்கள் சுகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அது சரிதானா? தண்ணீரானது, "நான் என்னவொரு மகத்தான தண்ணீராக இருக்கிறேன் என்பதைப் பாருங்கள்?" என்று கூறக்கூடுமா? இல்லை, சுகமளித்தலைச் செய்வது தண்ணீரில் இருந்த தூதன் தான், தண்ணீர் அல்ல, தூதன் தான். அந்த தூதன் அங்கிருந்து போன போது, அது வெறும் தண்ணீராகத்தான் இருந்தது. மனிதர்கள் வெறுமனே மனிதர்கள் தான், ஆனால் அது ஜனங்களுக்கு சேவை செய்யும் தேவனுடைய காரியமாக இருக்கிறது (God's agency).

23. தேவன் ஸ்தாபனங்களில் தொடர்பு கொள்வதில்லை. தேவன் இயந்திர கருவிகளையும் தொடர்பு கொள்வதில்லை. தேவன் பரிசுத்த ஆவியானவர், மனிதர்களைத் தான் தொடர்பு கொள்கிறார். மனிதன் தான் தேவனுடைய காரியஸ்தனாயிருக்கிறான் (agent), செய்யும்படிக்கு தேவனுக்கு எப்பொழுதாவது இருந்த மிகக் கடினமான காரியம் என்னவென்றால், ஒரு மனிதன் வேறொரு மனிதனை நம்பச் செய்வது தான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர்களால் மோசேயை விசுவாசிக்க முடியாதிருந்தது, அவன் அவர்களை விடுவிப்பதற்காக தேவனிடமிருந்து அனுப்பப்பட்டிருந்தான் என்பதை ஜனங்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காக தேவன் அவனுக்கு இரண்டு அடையாளங்களைக் கொடுத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் இல்லையா? எரிகிற முட்செடியில் அவனோடு பேசின தூதனானவர் தான் உடன்படிக்கையின் தூதன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரிதானா? சரி. அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார். அவர் அப்போழுது செய்த அதே காரியங்களை இன்றும் செய்கிறார். அவர் இன்னும் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் அற்புதங்களைச் செய்கிற தேவனாக இருக்கிறார். அவர் எப்போதுமே அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டு ஒரு அற்புதமான வழியில் கிரியை செய்கிறார். அவர் அவைகளை கடைசி நாட்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய ஜனங்களை ஒன்றாகக் கொண்டுவரும்படியாக, இப்பொழுது அவைகளை நாம் எதிர்பார்க்க நமக்கு உரிமை உள்ளது.

24. அதன் பிறகு இயேசு வந்தபோது, அவர் ஒரு சுகமளிப்பவர் என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாதிருந்தது. இயேசு கிறிஸ்து தாம் சுகமளிப்பவர் என்று ஒருபோதும் கூறவேயில்லை, அவர் அவ்வாறு கூறினாரா? அவர், "கிரியைகளைச் செய்வது நானல்ல; அது என்னில் வாசமாயிருக்கிற பிதாவானவராய் இருக்கிறது. அவர் தான் கிரியைகளைச் செய்கிறார்" என்றார். அது சரிதானா? அதன்பிறகு தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டவர் அவர் தான். அவர் அடையாளங்களை உடையவராயிருந்தார், அது மேசியா - மேசியாவுக்கான நற்சாட்சிப் பத்திரமாக இருந்தது, அது அவருடைய மேசியாத்துவத்தை நிரூபித்துக் காட்டினது. நான் இன்றிரவு இதன் பேரில் பேசி, தேவன் ஒரு வரத்தின்மூலமாக ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்திருக்கிறார் என்று உங்களிடம் கூறினால், நான் அந்த வரத்தைக் குறித்துப் பேச மாட்டேன்; அது தனக்காகவே பேசும். நான் உங்களிடம் கிறிஸ்துவைக் குறித்து பேசினால், நான் வேதப்பூர்வமாக இருந்தால், நான் என்ன கூறுகிறேனோ அதை நீங்கள் விசுவாசியுங்கள். கிறிஸ்து எனக்காக திரும்ப பேசுவாரானால், அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

25. நான் உங்களிடம் எதையாவது கூறி, அது அவ்வண்ணமாகவே இருக்கிறது என்று கிறிஸ்து கூறாவிட்டால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் அவர் செய்த ஏதோவொன்றை நான் உங்களிடம் கூறி, அவர் அதைச் செய்திருக்கிறார் என்று, அவரே பின்னாலிருந்து சாட்சி கொடுப்பாரானால், அப்பொழுது நீங்கள் அவரை விசுவாசியுங்கள். அது நியாயமானதாக இருக்குமா? அது... இப்பொழுது, வரமானது யாரையும் சுகப்படுத்துவது கிடையாது. வரமானது சுகமளிப்பதற்காக அல்ல, இரட்சிப்பிற்காக ஒரு சுவிசேஷ பிரசங்கியார் அனுப்பப்படுவதைக் காட்டிலும் அது மேலானது அல்ல. அவரால் யாரையும் இரட்சிக்க முடியாது. தேவனுடைய வார்த்தையைக் குறித்து அறிவை ஜனங்களுக்குக் கொண்டு வந்து, அவர்கள் வந்து தங்கள் அறிக்கையைச் செய்யும்படிக்கு, வல்லமையின் கீழாக அவரால் பிரசங்கம் பண்ண முடியும், தேவன் தான் இரட்சிக்கிறார். அது சரிதானா? அதுவும்அதே காரியம் தான். அவர் - அவர் ஒரு அடையாளத்தை உடையவராயிருக்கிறார். மனிதன் இருதயத்திற்கு திடநம்பிக்கையைக் கொண்டு வருகிற வல்லமையின் கீழ் அவர் பிரசங்கம் பண்ணுகிறார், அவர்களும் பீடத்தண்டையில் வந்து, விசுவாசத்தினாலே, அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அப்பொழுது அதன் முடிவுகளைக் காண்கிறார்கள். அது சரிதானா? அவர்கள் தேவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போது, அவரிடம் ஒப்புவித்து விட்டு, அவரை விசுவாசிக்கிறார்கள், அப்பொழுது அது விளைபயன்களைப் பிறப்பிக்கிறது. இப்பொழுது, ஒரு சுகமளித்தல் - சுகமளித்தல் என்பது அதே விதமாகத்தான் இருக்கிறது. வருடங்களினூடாக ஊழியக்காரர்கள் பிரசங்கம் பண்ணியிருக்கிறார்கள், ஆனால் இந்த நாளோ தேவன் வித்தியாசமான ஏதோவொன்றைச் செய்து கொண்டிருக்கும் நாளாக இருக்கிறது.

26. இப்பொழுது, இந்த வரமானது எல்லா வியாதிகளையும் பலர் அறியக் கூறுகிறது. இப்பொழுது, இதுதான் உரிமைக் கோரிக்கைகளாக இருக்கிறது. இந்த வரமானது எல்லா வியாதிகளையும் பலரறியக் கூறி, பாவங்களைக் கடிந்து கொண்டு, ஜனங்களுடைய இருதயங்களின் இரகசியங்களை அழைக்கிறது. மேலும் இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஜெப வரிசையில் வருகிற எந்த நபரும், நீங்கள் அறிக்கை செய்யப்படாத பாவத்தோடு வருவீர்களானால், அது இந்த மேடையிலிருந்து சொல்லப்படும் என்பது நினைவிருக்கட்டும். அது எவ்வளவு இழிவானதாகவோ, அது எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது காரியமில்லை, அது இந்த மேடையிலிருந்து கூறப்படும். இப்பொழுது, கொடுக்கும்படியாக ஒரு பெரிய வாக்குமூலமாக அது இருக்கிறது. மேலும், நான் ஆயிரக்கணக்கான ஜனங்கள் முன்பாக நின்று கொண்டிருக்கிறேன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், ஆனால் அது ஒருபோதும் ஒரு முறையும் தவறிப்போனதேயில்லை. அது எப்போதுமே பரிபூரணமாக இருந்து வருகிறது, இங்கே ஒரு சில இரவுகளுக்கு முன்பு கூட சொல்லப்பட்டது... நிச்சயமாக நான், நான் அபிஷேகத்தின் கீழாகப் போகும்போது, நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வது கடினம். பியூமாண்ட்டில் ஒரு வாலிப பெண் மேடைக்கு வந்ததாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள், அதுதான் என்று நம்புகிறேன், கூறினார்கள், அந்த நபர் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் கண்டபோது, அவர்கள் சிறுபருவத்தினராக ஆகத் தொடங்குவது போன்று அது காணப்பட்டது. அவர்கள் கீழே ஒரு குறிப்பிட்ட சிறு வயதுக்குப் போனார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நான் காண்பதை நான் கூறத் தொடங்கினேன். அது சரியாக தோன்றுகிறது.

27. ஒரு சில இரவுகளுக்கு முன்பு, இங்கே இந்தச் சிறு பெண் பிள்ளையிடம் கூறப்பட்டது, அவளுக்கு ஏறக்குறைய பதினான்கு அல்லது பதினைந்து வயதாக இருக்கும் போது, அவளுக்கு விவாகம் ஆகாமலேயே அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் அதோடு கூட, ... இல்லாதிருந்த ஒரு மனிதனை விவாகம் செய்யும்படியாக, சில பக்தியுள்ள ஜனங்கள் மூலமாகவும் கூட அவள் கவர்ந்திழுக்கப்பட்டாளாம். அவளுக்கு சிநேகம் இல்லாதிருந்தது, மேலும் நிறைய பிரச்சினைகளுக்கும் மற்றும் அதைப்போன்ற மற்ற காரியங்களுக்கும்அது காரணமாகியது. மேலும் ஏறக்குறைய... அதே குறிப்பிட்ட இடத்திற்கு மேடைக்கு அவள் வருவதற்கு முன்பாகவே, அவள் செய்திருந்த நிறைய காரியங்களும், அதைக் குறித்தும். அந்தவிதமாகத்தான் அது இருந்தது, அவள் ஜெபித்துக்கொண்டும், நின்று ஜெபித்துக் கொண்டு, தேவன் அவளைச் சுகப்படுத்த வேண்டுமென்று அவரிடம் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருந்தாள்... அங்கே யாராவது இருந்தீர்களா? அது உண்மை தானா? அது... ஓ அது, நல்லது அங்கே, ஆமாம், அது அருமையாக இருக்கிறது. இதோ ஜனங்கள்... அது மட்டுமல்ல, ஆனால் அப்படியே... மற்ற கூட்டங்களில் இருந்து வருகிற ஜனங்களாகிய நீங்கள், அது அது ஒவ்வொரு முறையும் சரியாகவே இருக்கிறது, அது...? அது அவ்வாறு இருந்தால், அது உண்மையானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அது - அது கூறப்பட்ட போது, உங்களெல்லாருக்கும் அது தெரியும்... அது சரியே. இப்பொழுது, மற்ற ஜனங்களுக்கு சாட்சிக்காக...

28. எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. நான் என்ன கூறப்போகிறேன் என்று கூட எனக்கு -எனக்குத் தெரியாது. இன்றிரவு ஜெப வரிசையில் வரும் இந்த ஜனங்களில் ஒருவரையும் எனக்குத் தெரியாது என்று தேவன் அறிவார். ஒருவரையும் எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் ஒவ்வொரு நபரையும் எவ்வாறு சுகப்படுத்துகிறாரோ அதைத் தவிர அது தவறினதை நான் ஒருபோதும் கண்டதில்லை, அவர்கள் எவ்வளவு மோசமாக வியாதிப்பட்டிருந்தாலும், அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும், அல்லது அது என்னவாக இருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல; அவர் அவர்களைச் சுகப்படுத்தினார். அது மட்டுமல்ல, ஆனால் அது கூட்டத்தினருக்குள்ளும், ஜனங்களில் வித்தியாசமான காரியங்களுக்குள்ளும், பால்கனிகளிலும் மற்றும் காரியங்களிலும் உரத்த சத்தமாகப் பேசுகிறது. அது சரியே. அது சத்தியமாக இருக்கிறது. இப்பொழுது, நான் கூறுவதை உரிமைக்கோருகிறேன். அதற்கும் உங்கள் சுகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த நபர் மேடைக்கு வருகிறபோது மட்டுமே... இன்றிரவிலும், ஒவ்வொரு இரவிலும் வருகிற ஜனங்களைக் கவனித்துப் பாருங்கள், அதாவது பரிசுத்த ஆவியானவர் வருவாரானால். அவர்கள் மேடைக்கு வந்து, அவர்கள் எட்டு அல்லது பத்து அடிகள் தூரத்தில் இருக்கும் போது, நீங்கள் அவர்களைக் காண்பீர்கள், அப்பொழுது அவர்களுடைய முகத்தின் மேல் ஒரு மாற்றம் வருவதைக் காண்பீர்கள். அப்பொழுது அந்த நோயாளிகளைக் கவனித்துப் பாருங்கள்.

29. அவர்களில் அநேகர் தடுமாறி, மயக்கமடைந்தும் கூட விடுகிறார்கள். அவர்கள் மிகவும் நினைவிழந்த நிலையில் ஆகிவிடுவதை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் அவர்களுடைய முகத்தை அவ்விதமாகத் தேய்க்க வேண்டியிருக்கிறது, அப்பொழுது அவர்கள் அழத் தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலும் ஒவ்வொரு நோயாளியும் மிகவும் வினோத உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்... மற்ற கூட்டங்களில், அது சத்தியம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இப்பொழுது, அங்கே தேவனுடைய தூதனானவரின் பிரசன்னம் இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். அப்போது நான் அதை அவர்களிடம் கூற முயற்சி செய்யும் போது, புகைப்படம் எடுக்கப்பட்டு, அது சரி என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, இங்கேயிருக்கும் அதன் புகைப்படத்தை நீங்கள் காண்கிறீர்கள். இப்பொழுது, அவர்கள் அங்கே நின்று கொண்டிருக்கும் போது, அவர்கள் இயற்கைக்கு மேற்பட்ட ஜீவனின் பிரசன்னத்தில் இருப்பதை அறிந்து கொள்ளுகிறார்கள். இல்லை, அது நானல்ல. அதற்குமேலும் எந்த - மிகச்சிறியவர்களாகிய உங்களில் எவரைக் காட்டிலும் நான் மேலானவனாக இல்லை, ஆனால் அது வெறுமனே ஒரு வாய்க்காலாக இருக்கிறது, அவர் - அது இதனூடாகக் கிரியை செய்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவர் அதை அறிவிக்க வேண்டியிருக்கிறது. அவர் அப்படியே... அது... என்று இருக்கும்படியாக நேரிடுகிறது. நான் பிறந்ததிலிருந்தே அவர் என்னை அழைத்தார். வரங்கள் வெறுமனே உங்களிடம் கொடுக்கப்படுகின்றன என்று நான் நம்புவதில்லை.

30. "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே கொடுக்கப்படுகின்றன" என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் இந்தக் காரியங்களைக் கொண்டே பிறக்கிறீர்கள். முன்குறித்தலில் உங்களுக்கு விசுவாசம் உண்டா? எல்லாருக்கும்? ஆனால் காரியங்கள் தேவனால் முன்குறிக்கப்படுகின்றன. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கும்படிக்கு ஏதேன் தோட்டத்திலேயே முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டார் (foreordained). நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "உன்வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்." மோசே தேவனால் நியமிக்கப்பட்டு, முன் தீர்மானிக்கப்பட்டிருந்தான். அவன் பிறந்த போது, அவன் ஒரு ஏற்ற பிள்ளையாக இருந்ததைக் கண்டுகொண்டார்கள். அது சரிதானா? உண்மை. மேலும் கவனியுங்கள், யோவான் ஸ்நானகன், அவன் பிறப்பதற்கு 712 ஆண்டுகளுக்கு முன்பே, அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருந்தான். அது சரிதானா? எரேமியா, அது தான் என்று நம்புகிறேன், தேவன், "நீ பிறப்பதற்கு கூட, அல்லது உன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே, நான் உன்னை அறிந்து, உன்னை பரிசுத்தப்படுத்தி,நீ எப்பொழுதாவது பிறப்பதற்கு முன்பே,ஜாதிகள் மேல் உன்னை தீர்க்கதரிசியாக நியமித்தேன்" என்று கூறினார். அது சரிதானா?

31. வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகின்றன. தூதன் மரியாளுக்குத் தோன்றி, அவளிடம் கூறினான், சகரியாவுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றினான். அந்தக் காரியங்கள் உண்மையாக உள்ளன. இப்பொழுது, உதாரணமாக, சற்று நேரம் ஒரு காரியத்தைச் சரிப்படுத்த, அடுத்த ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் நாம் ஜெப வரிசையைத் துவங்கப் போகிறோம். சில ஜனங்கள், "பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு, அவர் சபையை வழிநடத்துகிறார். சபைக்குப் பிறகு, தூதர்கள் தோன்றுவது போன்ற அப்படிப்பட்ட எந்தக் காரியமும் கிடையாது" என்று கூறுகிறார்கள், இப்படியிருக்க நான் ஒரு கூட்டம் ஹோலினஸ் ஜனங்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, யாரோ ஒருவர் என்னிடம் கூறினார், அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நான் உம்மை ஒரு மனிதனாக மெச்சுகிறேன், ஆனால் உம்மிடத்தில் வருகிற ஒரு தூதனானவரைக் குறித்த உம்முடைய போதகம், அது ஒரு தவறாக இருக்கிறது. இப்பொழுது நமக்கு தூதர்கள் அவசியமில்லை. பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், அவர் வந்த பிறகு, தூதர்கள் போய் விட்டார்கள்" என்று கூறினார். அது தவறாக இருக்கிறது. பிலிப்பு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்ப்போம். நல்லது, அவன் சமாரியாவில் ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்த போது, அவனைத் தொட்டு, காசா வனாந்திரத்திற்கு போகும்படி அவனிடம் கூறினது யார்? அது கர்த்தருடைய தூதனானவர். அது சரிதானா?

32. பேதுரு பரிசுத்த ஆவியை உடையவனாயிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவன் பெந்தெகோஸ்தேவில் அந்தப் பிரசங்கத்தைப் பண்ணினான். நல்லது, அவன் சிறைச்சாலையில் இருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அல்ல, ஆனால் கர்த்தருடைய தூதனானவர் உள்ளே வந்து, அவனைத் தொட்டு, அவனை வெளியே வழிநடத்திச் சென்றார்... அது சரிதானா? அது கர்த்தருடைய தூதனானவர் தான். பவுல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவன் வெளியே கப்பலில் இருந்த போது, சற்றேறக்குறைய கீழே போகும் நிலையில், நட்சத்திரங்களோ, சந்திரனோ, அல்லது எதுவுமோ, அல்லது வெளிச்சமோ இல்லாமல் இருந்தது. அப்போது அவன் எங்கோவிருந்த நீண்ட தாழ்வாரத்தில் இறங்கிச் சென்று, ஜெபித்துவிட்டுத், திரும்ப வெளியில் வந்து, "திடமனதாயிருங்கள், நான் சேவிக்கிற கர்த்தருடைய தூதனானவர் எனக்குத் தோன்றினார்" என்றான். அது சரிதானா - அது சரியா? அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று விசுவாசிக்கிறீர்களா? வெளிப்படுத்தினவனாகிய யோவான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? முழு வெளிப்படுத்தின விசேஷ புத்தகமும் ஒரு தூதன் மூலமாக அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது." சாட்சிபகரும்படியாக, நான் என்னுடைய தூதனை அனுப்பினேன்." யோவான் கீழே விழுந்து, அந்த தூதனைப் பணிந்துகொள்ள முயன்றான். அது சரிதானா? அதற்கு அவன், "அதைச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் தீர்க்கதரிசியோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன். தேவனைத் தொழுதுகொள்" என்றான். அது சரிதானா?

33. சபைக்கு தூதர்களின் ஆளுகையின் (administration), மூலமாக, பரிசுத்த ஆவி யுகம் உள்ளே வந்து, தொடர்ந்தது, அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அது உண்மை. ஆனால் அவர்கள் காரியங்களை வெளியே கொண்டு செல்வதற்கு நியமனம் செய்யப்பட்ட தேவனுடைய ஆவிகளாகவும், தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவைகளாகவும் இருக்கின்றன. முற்காலத்தில் காலங்களினூடாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விசேஷ அழைப்பு இருந்தது, தூதர்கள் மனிதர்களிடம் விஜயம் செய்தார்கள். ப்ரிகாம் எங்-ஐப் போன்றும், மற்றவர்களைப் போன்றும், அது தூதர்களைத் தொழுதுகொள்வது அல்ல. ஆனால் தேவனுடைய ஒரு தூதன் தேவனுடைய சத்தியத்திற்கு சாட்சிகொடுப்பார். அது சரியே. அது தேவனை அறிவிக்கும். அது ஏதோவொரு விதமான புராண பழங்கதை சம்பந்தமான எதையோ உடையதாய் இருக்காது, அதை யாருமே புரிந்துகொள்ள மாட்டார்கள். அது இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பேசி, இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சிகொடுத்து, ஜனங்களிடம் இயேசு கிறிஸ்துவை உற்பத்தி செய்யும். ஆமென். அந்த ஆமென் எனக்குப் பிடிக்கும். அதற்கு, "அப்படியே ஆகக்கடவது" என்று அர்த்தம். எனக்கு -எனக்கு அது பிடிக்கும்.

34. சரி. இப்பொழுது, கடைசி நாட்களானது இங்கேயிருக்கிறது என்று சபைக்கு சாட்சிபகரும்படியாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து அனுப்பப்பட்ட தேவனுடைய தூதனானவர் தான் இவர். இது யாரையும் சுகப்படுத்துவதில்லை, ஆனால் இது உங்கள் விசுவாசத்தை ஒரு நிலைக்கு உயர்த்துவதற்கு உதவிபுரிகிறது... இங்கே மேடையின் மேல் ஒரு நபர் நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணும்போது... இப்பொழுது, அங்கேயிருக்கும் உங்கள் எல்லாரிடமும், அது... எத்தனை பேர் இங்கே ஜெபிக்கப்படுவதற்காக இருக்கிறீர்கள், கூட்டம் முடியும் முன்பாக, நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். நல்லது, ஐம்பது பேருக்கும் மேலாக நிறைய பேர் இருக்கிறீர்கள் என்று அறிகிறேன். தங்கள் ஜெப அட்டைகளை மேலே பிடித்திருக்கிறவர்களாக இருக்கிற ஒவ்வொரு நபரிடத்திலுமுள்ள ஜெப அட்டைகளை நான் காண்கிறேன். கவனியுங்கள், தேவன் இங்கே மேடையின் மேல் ஏதோவொன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, அங்கேயிருக்கிற உங்களைக் குறித்தும் கூட அவருடைய மனப்பான்மை அதுவாகத்தான் இருக்கிறது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்? அது இங்கே மேடையின் மேல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் இருப்பீர்களானால், தேவன் சரியாக இதை விட்டு வெளியே இழுத்து, நீங்கள் யாரென்று அழைத்து, கட்டிடத்தை விட்டும் (அது சரியே), கட்டில், தூக்கு படுக்கை, அல்லது நீங்கள் எங்கேயிருந்தாலும், அதை விட்டு எழுப்புவார் என்று நான் உங்களுக்கு உறுதியாகக்கூறுவேன், அது நினைவிருக்கட்டும். இங்கே, அன்றொரு இரவில், அவர் இறங்கி வருவதை ஒரு ஊழியக்காரர் கண்ட பிறகு, ஒரு சிறு பெண் பிள்ளை அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள், ஒரு மனிதன் வந்து கொண்டிருப்பதை நான் - நான் கண்டேன், ஒரு ஊழியக்காரர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார், ஏதோவொன்றைச் செய்யும்படி தேவன் அவரிடம் கூறினார். அவரோ அதைச் செய்யத் தவறினார். அதன்பிறகு, பிரச்சினை ஏற்படத் தொடங்கினது. அவருடைய பிரச்சனைகள் அவரிடம் கூறப்பட்டன, அங்கே ஒரு எலும்பு பொருத்தி இணைக்கப்பட்டவனாய் கிடத்தப்பட்டிருந்து, அந்தப் பக்கமாக பார்க்கும்படி நேரிட்டது, ஒரு மனிதன் முழுவதுமாக திருகிப்போன உறுப்பைக் கொண்ட ஒரு மனிதனைக் கண்டேன், அவன் தாவியேறிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்... அவன் ஒரு கப்பலின் பாய்மரம் முதலானவற்றைக் கட்டுபவராக (rigger) இருக்கிறார். அவர் கயிற்றை சுருக்குவதற்கான இரட்டைமுடிச்சை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். நான் என்ன பார்த்துக் கொண்டிருந்தேன் என்றும், குறிப்பிட்ட காரியங்களைக் குறித்தும் கூறத் தொடங்கினேன். மேலும் அதன்பிறகு, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அங்கே தான் அது இருந்தது, அவன் சுகமாக்கப்பட்டான்.

35. முழுவதும் நீட்டப்பட்டிருந்த தன்னுடைய கரங்களை உடையவளாக ஒரு சிறு பெண் இவ்விதமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். ஒரு தாயார் ஒரு துப்பட்டியையும், ஒரு பிள்ளையையும் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன், அது ஒரு வலிப்பு நோய்க்கு ஆளான பிள்ளையாக இருந்தது. சற்று கழித்து, அந்தப் பிள்ளை மேஜையிலிருந்து விழுவதை நான் கண்டேன். சற்றே அதைக் கூறத் தொடங்கி... இந்தச் சிறு பெண் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்; அவள் ஒருபோதும் நடந்ததேயில்லை; அவள் அங்கே சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அதன்பிறகு நான் பார்த்த போது, அந்தச் சிறு பெண் பிள்ளை எல்லாரையும் நோக்கி கையை அசைத்துக் காட்டி, கர்த்தரைத் துதித்தபடி தெருவில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் இதைக் கூறிக் கொண்டிருந்தேன், நான் என்ன பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை சரியாக சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சிறு பெண் பிள்ளை அங்கே நின்று கொண்டிருந்தாள், "உன் கால்களை ஊன்றி எழுந்து நில்; இயேசு கிறிஸ்து உன்னைச் சுகமாக்குகிறார்." அப்போது அவள் அந்தக் கட்டிடத்தினூடாக மேலும் கீழும், குதித்தபடி போனாள். அது ஒருபோதும் தவறிப்போவதே கிடையாது. அது அவ்வாறே இருந்தாக வேண்டும். ஓ, அல்லேலூயா. நண்பர்களே, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, நான்... என்று நினைத்து விடாதீர்கள்.

36. [இந்த ஒலிநாடாவின் மீதமுள்ள பாகம் இந்தக் குறிப்பிட்ட செய்தியைச் சேர்ந்ததாக இல்லாமல் இருக்கலாம்.]...?... அவர் ஒரு மனிதனைப் போன்று அழுதார். அது உண்மை. அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். என்னே, அவருக்கு நாம் அவரை விரும்பத்தக்க சௌந்தரியம் எதுவுமில்லாதிருந்தது என்று வேதாகமம் கூறுகிறது. அவர் அங்கே நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள், அவருடைய சிறிய பலவீனமான சரீரமானது அங்கே நின்று கொண்டிருந்து, அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தது (streaking down). ஆனால் திடீரென்று தேவன் அவர் மேல் வந்தார், அப்போது அவர் தம்முடைய சிறிய சரீரத்தை இழுத்துநிமிர்த்தினார். அங்கே ஒரு மனிதன் மரித்தவனாக படுத்திருந்தான், அவன் நான்கு நாட்களாக கல்லறையில் அழுகிப் போயிருந்தான்: தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊர்ந்து கொண்டிருந்தன. அவர் அங்கே நின்றுகொண்டு, உரத்த சத்தத்தோடே, "லாசருவே, வெளியே வா" என்றுபேசினார் (screamed). அது என்னவாக இருந்தது? தேவன் அந்த கண்ணீர்கள் வழியாகப் பார்த்து, அந்த சாவுக்குரிய உதடுகள் வழியாக பேசிக் கொண்டிருந்தார். அது சரியே. "லாசருவே, வெளியே வா." லாசரு மரித்துப் போயிருந்தான்; அவனுடைய ஆத்துமா வெளியே நான்கு நாட்களாக நித்தியத்தில் இருந்தது. எங்கே என்று எனக்குத் தெரியாது, உங்களுக்கும் அது தெரியாது, எனவே நாம் அதைக் குறித்து விவாதிக்க மாட்டோம். ஆனால் அந்த மனிதன் அங்கே கல்லறையில் அழுகிப் போனவனாகக் கிடந்தான், அவனுடைய ஆத்துமாவோ நான்கு நாட்கள் பிரயாணத்தில் இருந்தது, அழிவு அதனுடைய சிருஷ்டிகரை அறிந்திருந்தது. ஜீவியத்தினூடாக அவனுடைய ஆத்துமாவானது...?... இருந்தது. அந்த மனிதன் மரித்துப்போய் நான்கு நாட்கள் ஆகியிருந்தது, இப்பொழுதோ அவன் ஜீவனுள்ளவனாயிருக்கிறான். அல்லேலூயா. தேவன் தம்முடைய குமாரனுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் அவருடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரியே. தேவன் அவருக்குள் ஜீவித்தார். அவர் மரித்தபோது... கிறிஸ்து மனிதனைப் போன்று மரிக்க வேண்டியிருந்தது, நம்மைப் பிதாவிடம் திரும்ப மீட்டுக்கொள்ளும்படியாக அவர் ஒரு மனிதனாக இருந்தார். அது முற்றிலும் சரியே.

37. ஓ, இப்பொழுது சற்றே அதன்பேரில் சார்ந்திருக்கும்படி நமக்கு நேரம் இருந்திருக்குமானால், ஆனால் நம்முடைய நேரம் போய்க்கொண்டேயிருக்கிறது. தேவன் தம்முடைய குமாரனுக்குள் இருத்தல், தேவன் தம்முடைய பிரபஞ்சத்தில் இருக்கிறார். தேவன் தம்முடைய -தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். தேவன் தம்முடைய குமாரனுக்குள் இருத்தல், இப்பொழுது, சற்றுநேரம் தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருத்தல். கவனியுங்கள், நண்பர்களே...?... தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவர் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். ஓ, என்னே. கவனியுங்கள், தேவனைத் தம்முடைய வார்த்தையில் எடுத்துக்கொள்ள, மேலே எருசலேமுக்குப் போய், அங்கே சற்றுநேரம் தரித்திருக்க, துணிவுகொண்டிருந்த, கோழைத்தனம் மிக்க அந்த 120 பேர்கள். திடீரென்று, அவர்கள் அங்கே மேலே இருக்கையில், தேவன் தம்முடைய ஜனங்கள் மத்தியில் வாசம்பண்ணும்படியாக இறங்கி வந்தார். அவர் அவ்வாறு இறங்கி வந்தபோது, அவர்கள் ஜன்னல்கள் வழியாகவும், கதவுகள் வழியாகவும், மற்ற எல்லாவற்றினூடாகவும் போய், வெளியே தெருக்களில் போனார்கள்; அதற்கு மேலும் அவர்களுக்குப் பயமில்லாதிருந்தது. நம்முடைய தேவன் அதோ அங்கே மீண்டுமாக மாம்சத்திற்குள் இறங்கி வந்து, இன்றிரவும் தம்முடைய ஜனங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா. தேவன் தாமே, பரிசுத்த ஆவியாகிய தேவன், தம்முடைய ஜனங்களுக்குள் ஜீவிக்கிறார்.

38. இங்கே ஒருசில இரவுகளுக்கு முன்பு, அதோ அங்கே நின்று கொண்டிருக்க, ஒரு - ஒரு ஊழியக்காரர், அவர், "தெய்வீக சுகமளித்தல்... சகோதரன் பிரன்ஹாம் ஒரு ஏமாற்றுக்காரர். அவரிடத்தில் எதுவுமே கிடையாது. அவர் ஒரு மதசம்பந்தமான சட்டவிரோதமான வணிக காரியங்கள் செய்பவர். அங்கே அவரிடம் எதுவுமேயில்லை. தெய்வீக சுகமளித்தலானது ஒரு போலியாக இருக்கிறது மற்றும் சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் எல்லாருக்கும் தலைவர்: ஒரு பித்தலாட்டம் பண்ணுபவர்" என்று கூறினார். நான் ஒருக்காலும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் மேடையை நோக்கி நடந்து சென்று, நான், "இல்லை, நான் ஒரு வஞ்சகன் அல்ல" என்று கூறினேன். தேவன், அவரே என்னுடைய சாட்சியாக இருக்கிறார், ஏறக்குறைய அந்நேரத்தில், வானங்களிலிருந்து வேகமாகச் சுழன்றபடி அக்கினி வந்தது. தேவன் இறங்கி வந்து, பரிசுத்த ஆவியானவர் என்மேல் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுக்கும்படியாக இயந்திர லென்ஸ்களுக்கு அனுமதி கொடுத்தார். தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். அல்லேலூயா. தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார் என்று நாமெல்லாரும் விசுவாசிக்கும்போது, சரியாக அங்கேயே ஜனங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆம், ஐயா. அவர் அந்த கவிஞர்களின் இருதயங்களை எழுச்சியடைய பண்ணினார். ஓ, அது கற்பனையான காரியத்தைக் காட்டிலும் மேலானது. அது தேவனை நம்பின மனிதர்களாகவும், தேவனை விசுவாசித்த மனிதர்களாகவும் இருக்கிறது.

39. ஒருசமயம் அங்கே ஒரு மனிதன் இருந்தான்...?... அவன் ஒரு நாள் எழுதிக் கொண்டிருந்தான், அவன் எழுதினான் - அவன் ஒரு பாடலை எழுத முயற்சித்துக் கொண்டிருந்தான்; அவனால் அதைச் செய்ய முடியாதிருந்தது. என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியாதிருந்தது. சடுதியாக, எடி பெரோனெட் என்ற பெயருடைய வேறொரு மனிதரிடம் ஒரு பாடல் வந்தது, அவர்...?... அவர் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் மேல் தேவனுடைய ஆவியானவர் வந்தார். அப்போது அவர் தம்முடைய பேனாவைப் பிடித்த இவ்வாறு எழுதினார்: இயேசுவின் நாமத்தின் வல்லமைக்கே எல்லா வாழ்த்துமாம்! தூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியட்டும்; ராஜ முடியைக் கொண்டு வந்து, எல்லாருக்கும் கர்த்தரான அவருக்கு முடிசூட்டுங்கள். ஒருபோதும் பகல்வெளிச்சத்தைப் பார்த்திராத, வயதாகவும் குருடாகவும் இருந்த ஃபன்னி கிராஸ்பி அவர்கள், ஒரு நாள் அறை ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, தேவன் தம்முடைய குருடான கவிஞர் பெண்ணின் மேல் வந்தார். அவர் அவ்வாறு அவள் மேல் வந்தபோது, அவள் இவ்வாறு எழுதினாள், ஓ சாந்தமான இரட்சகரே, என்னைக் கடந்து செல்லாதேயும், என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்குச் செவிகொடும்; மற்றவர்கள் உம்மை கூப்பிட்டுக் கொண்டிருக்கையில், என்னைக் கடந்து சென்றுவிடாதேயும். நீரே என்னுடைய ஆறுதல் எல்லாவற்றிற்குமான ஓடை, என் ஜீவனைப் பார்க்கிலும் மேலானவர், பூலோகத்தில் உம்மைத் தவிர வேறு யார் எனக்கு உண்டு? பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் எனக்கு உண்டு? அது சரியே. வேறொருவர் இவ்வாறு எழுதினார், ஜீவிக்கும்போது அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்படும் போது, அவர் என்னுடைய பாவங்களை வெகு தூரம் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்த போது, அவர் என்னை இலவசமாய் என்றென்றுமாய் நீதிமானாக்கினார்; என்றோ ஒரு நாள் அவர் வருகிறார் - ஓ மகிமையான நாள்.

40. இது என்னவாக இருக்கிறது? தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார், தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார், தேவன் தம்முடைய ஊழியக்காரருக்குள் இருக்கிறார், தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்குள் இருக்கிறார், தேவன் தம்முடைய சுகமளித்தலில் இருக்கிறார். ஓ, இன்றிரவு தேவன் இங்கே இக்கட்டிடத்திற்குள் இருக்கிறாரா? நீங்கள் சரியாக இப்பொழுதே அதை விசுவாசிக்கிறீர்களா? அது சரியே. தேவன் தம்முடைய சிருஷ்டிப்பில் இருக்கிறாரா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அது சரிதானா? தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறாரா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருந்தாரா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?. அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார் என்று என்னால் நிரூபிக்க முடியும். அது தேவன் என்றும், சரியாக இப்பொழுதே பரிசுத்த ஆவியானவர் இந்தக் கட்டிடத்தின் மேல் பாய்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், அது அதே காரியம் தான், அவர் இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துகிறார். தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். இரவு நேரத்தில், அவர் அழைக்கிற போது, நான்... என்று விசுவாசிக்கிறேன். அவர் அழைக்கிற போது, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அல்லேலூயா. நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருக்கால் நீங்கள் அவ்வாறு நினைக்கலாம், ஆனால் நான் அவ்வண்ணமாக நினைக்கவில்லை. என்னால் என்னுடைய...?... இழக்க முடியாதிருந்தது. உலகத்தைக் குறித்து சிந்தை, நான் கிறிஸ்துவைப் பற்றிய சிந்தையை உடையவனாயிருக்கிறேன். அவர் எனக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானவராயிருக்கிறார்...?... நீங்கள் விரும்புகிற எதுவாகவும் நீங்கள் அதை அழைக்கலாம்...?... உங்களுக்கு பரிசுத்த ஆவி தேவைப்படுமானால், இன்றிரவு பரிசுத்த ஆவியை உங்களால் அழைக்க முடியும். ஆனால் நான் ஒருநாள் ஒரு பாவியாக இருந்தேன்; இப்பொழுதோ நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன். ஒரு நாள் நான் குருடனாக இருந்தேன்; இப்பொழுதோ காண்கிறேன். ஒரு நாள் நான்...?... இருந்தேன். எல்லாவிதமாகவும்...?... ஒரு நாள் அதோ அங்கே வேறொருவர், "திரு. பிரன்ஹாம் அவர்களே, நான் இந்தப் பாரத்தை உம்மிடம் விட்டுச்செல்ல வருந்துகிறேன், ஆனால் நீர் முடிந்துபோய் விட்டீர்" என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவர்கள் என்னிடம், "நீர் முடிந்துவிட்டீர்" என்று கூறினார்கள். இன்றிரவிலோ, நான் எப்பொழுதும் இருந்ததிலேயே மிக ச் சிறப்பான ஆரோக்கியத்தில் இருக்கிறேன். தேவன் இன்னுமாக தம்முடைய ஜனங்களில் இருக்கிறார். அல்லேலூயா...?... அதை விசுவாசிக்கிறீர்களா...?... என்னால் எவ்வாறு அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும்? அது சத்தியம் தானா? அப்படியானால் ஆமென் என்று கூறுங்கள். எங்கள் பிதாவாகிய தேவனே, இன்றிரவு இந்த ஜனங்கள் மேல் உம்முடைய தனித்தன்மையை ஊற்ற வேண்டுமென்று இப்பொழுது ஜெபிக்கிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும். இவர்கள் வியாதிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஓ தேவனே, உம்முடைய ஆவியானவர் தாமே உம்முடைய ஏழையும் தாழ்மையானவனுமாகிய ஊழியக்காரன் மேல் வருவாராக, பாவங்கள் அழைக்கப்படுவதாக; இன்றிரவில் இங்கேயிருக்கும் ஜனங்கள் தாமே எல்லா வகையான வியாதிகளிலிருந்தும் சுகமடைவார்களாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.